அன்புடையீர்
முழு நிலவு திருநாளான இந்த குரு பூர்ணிமா நாளில் தங்கள் மேன்மையான வருகைக்கு மிக்க நன்றிகளும்,வாழ்த்துகளும்.ஒவ்வொருவர் வாழ்விலும் இறைவன் குருவாக இருந்து தன் பேரறிவால் நம் செயல்களாகவும்,அதன் விளைவுகளாகவும் தன்னை வெளிப்படுத்துகிறான்.அவனுடைய வெளிப்பாடே ஞானமாகும்.நீங்கள்தான் அந்த ஞானமே.ஆகவே நாம் ஒவ்வொருவம் நமக்கு குரு நாதர்களே....புறத்தில் நீங்கள் வணங்கும் எல்லா குருமார்களும் நீங்களே...அதை உண்மையிலே நாம் அறியாதிருக்கிறோம்.அத்தகைய உறக்கம் கலைத்து நம்மை நாம் அறிய உறுதி பூணும் நாளே இந்த குரு பூர்ணிமாவாகும்.புறத்தில் நீங்கள் காணும் அனைத்து குருமார்களும் இத்தகைய உறக்கம் கலைத்து தன் உள் தன்மை என்கின்ற இறை தன்மையை உணர்ந்தவர்களே.இறை நிலை என்பது,சலனமில்லாத அமைதியான போது உணர்வு நிலையில் ஏற்படும் ஆனந்தமாகும்.இறை என்பது ஆனந்தமேயாகும்.நீங்களும் அத்தகைய ஆனந்தமே.ஆனால் நம்முடைய ஆனந்தம் என்பது புற மாற்றங்களை குறித்த கனவாகவே இருக்கிறது.அகத்தின் வெளிப்பாடெ புறம் என்ற உண்மை நமக்கு எப்போதும் கசப்பாகவே உள்ளது.ஏனெனில் அகம் எப்போதும் நிரம்பி வழிகிறது.உண்மையான ஆனந்தத்தை திருத்தி நல்வழிப்படுத்த நம் மனம் முயற்ச்சித்து நம்மை நம் இயல்பில் இருந்து வெளியேற்றுகிறது.பின் ஆனந்தம் என்பது ஆசை என்ற உரு மாற்றமாகி அதிகார அமைப்பாகவும் உங்கள் உள் நிலையில் சுமையாகவும்,சமூக அமைப்பில் சட்டங்களாகவும் உள்ளது.இந்த அடிப்படையில்தான் ஏசு பிரான் சுமைத் தூக்கி உள்ளவர்களே என்று நம்மை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.பெறும்பாலும் நாம் அதிகார அமைப்பில் இருந்து பெறுவது எப்பொதும் நமக்கு திருப்தி அளிப்பதில்லை ஏனெனில் அவை மேலும்...மேலும்...என்று நம்மை விடுவதாக இல்லை.அதனால் உண்டாகும் மகிழ்ச்சிகள்,பின் அதனை காப்பாற்றவே துன்பங்களாகி விடுகின்றன.மனித சரித்திரத்தில் இயல்பும்,அமைதியும் விலகி போய்...போருக்கு பின் அமைதி என்கின்ற பொய் அமைதியாய்....கலாச்சாரம் என்கின்ற பொய் இயல்பாய்....உருமாறி போய் விட்டது.ஒவ்வொரு மனிதனும் உண்மைக்காக ஏங்கும் நிலையும்,அதனை பயன்படுத்தி மதங்களின் பெயரால் ஏமாற்று வேலைகளும் நம்மை சூழ்ந்து ஏன் நடந்து கொண்டே இருக்கின்றன???
ஏன் நம்மை சூழ்ந்து நடந்து கொண்டெ இருக்கின்றன????
இதன் விடைகள் நிச்சயமாக உங்களுக்கு வெளியில் இல்லை..குருமார்கள்,மடங்கள்,புனித புத்தகங்கள் இவை எவெற்றிலும் இல்லவே இல்லை. ஏனெனில் அந்த விடை என்பது நீங்களும்....உங்கள் உடலும்..உங்கள் உணர்வுமே.....நிச்சயமாக அவற்றில்தான் உங்கள் சுயம் உள்ளது....உங்கள் உணர்வு நிலையில் இன்னும் இயல்பு உள்ளது....
ஏனெனில் நீங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறீர்கள்.....உயிரின் கதவுகள் இன்னும் திறந்தே இருக்கிறது....அந்த கதவுகள் வழியே ஆனந்த காற்றின் ஆலாபனை...அமைதியின் அழகான ஒளி உங்கள் மேல் பாய்ந்து கொண்டெ இருக்கிறது.....உங்களுக்குள் ஒரு அறிவான குரு எந்த சூழலிலும் அழியாது இருக்கிறார்.அவரை புரிந்து கொள்ளுங்கள்.....அவரை பின்பற்றுங்கள்..
சாதரணமானவர்தன் அவர்....ஆனால் சர்வமும் அவர்தான்.....உங்கள் உடலில் அவர் எளிமையாக இருக்கிறார்....ஆனால் ஆகாயத்திலும்,பிரமாண்டத்திலும் அவர் அவராகவே இருக்கிறார்....ஆனந்தத்தில் தன்னை இருத்தி கொண்டு ஆனந்தத்தின் பாடத்தை நமது மனது மூலமாக நமது வாழ்வில் நமக்கு நடத்தி கொண்டெ இருக்கிறார்...அவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் எனது குரு வணக்கங்களை தெரிவியுங்கள்
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment