ஓம் கோரக்கநாதாய நமஹ.
ஓம் சிவாய நம சித்தரே சரணம்
உயிர் வாழ்க...
உடல் வாழ்க...
***********************
நம் உலகில் வாழ் சர்வ உயிர்க்கும் எனது வணக்கங்கள்.
உலகில் வாழ் சர்வ உடலுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த பேருலகில் காணும் தோற்றங்கள் யாவும் உயிரின் வெளிப்பாடேயாகும்.இந்த வெளிப்பாடுகள் யாவும் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடேயாகும்.இதுவே பஞ்சாட்சரம் அல்லது நமசிவாயம்
என்று சித்தர்களால் துதிக்கப்பட்டுள்ளது.பஞ்சாட்சரம் என்பது மந்திரம் அல்ல.அது வாழ்வின் உன்னத குறியீடாகும்.உயிர் என்பது பஞ்ச பூதங்களின் உன்னத கலவையே.அல்லது உயிரின்
உள் நுணுக்கமே பஞ்ச பூதங்களாகும்.மண்,நீர்,தீ,காற்று,வான் இவை இயற்கையின் வெளிப்பாடுகளாகும்.இவற்றை அடிப்படையாக கொண்டே நம் மனித உடல் தோன்றி வளர்ந்து
மறைந்து வாழ்வின் சுழற்ச்சியை வெளிப்படுத்துகிறது.அத்தகைய
சுழற்ச்சியின் குறியீடே நமசிவாயமாகும்.
இந்த பிரபஞ்சம் என்பது பேரியக்கம் எனும் சிவமாகும்.அது அசையாமலே அசையும் தன்மை உள்ளதாகவும்,அசைக்கும் தன்மை உள்ளதாகவும் உள்ளது.இவையே இச்சா சக்தி எனவும்,ஞான சக்தி எனவும் வழங்க படுகிறது.அதாவது இச்சை என்பது ஒரு விதமான புற இயக்க களமாகும்.ஞானம் உள் இயக்க களமாகும்.உள் இயக்கம் எனும் சிவ சக்தியின் ஒழுங்கே புற இயக்கம் என்னும் சக்தியின் மூலமாகும்.உதாரணத்திற்க்கு உடலின் ஆரோக்கியத்தை வைத்து நம் புற இயக்கத்தை தீர்மானிக்கிறோம் அல்லவா...அவ்வாறே இதுவும். முழுமையின் வெளிப்பாடே இருமையாகும்.தோற்றம் இரண்டாக தெரியலாம்.அதனுள் இருக்கும் உண்மை ஒன்றே.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment