நன்றி சொல்வொம் நம் ஆண்டவருக்கு
திருமுடி திருநாளில்.....
அஷ்ட திசைகளையும் தன் அன்பென்ற செங்கோலால் ஆளக்கூடியவரும்,எங்கள் இதய துடிப்புமானவரும்,எங்கள் வாழ்வானவரையும் வணங்குகிறோம்.கடந்தத் திருமுடி திருநாளிலிருந்து இந்தத் திருமுடி திருநாள் வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் நன்றி கூறுகிறோம்.அவை இன்பம்,துன்பம்,வலி,சுகம் எவையாயினும் அதன் மூலம் உணர்த்தப்பட்ட பாடங்களுக்கும்,அது நிகழ்த்தப்பட்ட காரணங்களுக்கும் அனேக நன்றிகள்.சரணாகதி எனும் நீண்ட பாதையில் ஆண்டவரே நீரே எங்களோடு பயணிக்கிறீர்கள்.நாங்கள் எப்போதும் வழி தவறுகிறோம்...தடுமாறுகிறோம்...நீரே எங்கள் ஆதரவாய்,ஆதாரமாய் இருக்கிறீர்.உமது அருட்கருணையால் மட்டுமே சரணாகதி என்னும் இந்த நீண்டப் பாதையை எங்களால் தேர்ந்தெடுக்க முடிந்தது.அதில் பயணிக்க முடிந்தது.இதயத்திலிருந்து வாழ்தல் என்னும் அரியத் தத்துவத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிந்த்தது.ஒவ்வொரு நிகழ்வும் உமது அசைவு,ஒவ்வொருக் கணமும் உமது ஒளி,ஒவ்வொரு உயிரும் நீரே அன்றிப் பிற ஏதுமில்லை.சித்த சக்தியின் உன்னத பரிணாமத்தின் வெளிப்பாடே எமது ஆண்டவரே நீங்கள் எம்மை தேர்ந்தெடுத்தமைக்காக மிக்க நன்றி.அவ்வண்ணமே உலகில் வாழ்ந்த,வாழ்கின்ற,இனி வரப்போகின்ற அனைத்துக் குருமார்களுக்கும் எல்லாம் உமது திருவடியின் பெயரால் நன்றி தெரிவிக்கிறோம்.எங்கள் செயல்,எங்கள் உடல் மற்றும் உடமைகளை உங்கள் புனிதத் திருவடியில் சமர்ப்பிக்கிறோம்.அதை நீவிர் ஏற்றுக்கொண்டதர்க்கும் நன்றி கூறுகிறோம்.எமது விடியல்கள் உமது சூரியனால் ஆசிர்வதிக்கப்படட்டும்.எமது இரவுகள் உமது நிலவால் அமைதி அடையட்டும்.எமது எண்ணங்கள் எப்போதும் உமது தொடர்பு நிலையில் இருக்கட்டும்.ஓம் தத் சத்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment